சென்னை கீழ்பாக்கம் வாசு தெரு, பிரபல திரை அரங்கம் அருகே இருக்கும் சாலையில் பாதாள சாக்கடையை ஒட்டி பெரிய பள்ளம் விழுந்துள்ளது. சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளத்தால் பாதாள சாக்கடை சற்று உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக இந்த இடம் மாறிவருவது குறிப்பிடத்தக்கது. எனவே சாலையை சீரமைத்து விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.