போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுமா?

Update: 2022-06-21 14:49 GMT
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஊரப்பாக்கத்தில் இருந்து புலிப்பாக்கம் சுங்கச்சாவடி வரையில் இருக்கும் சாலையின் விரிவாக்கம் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வேலைக்கு செல்லும் மக்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. சாலை விரிவாக்கம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்