சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-08-12 15:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை- ஓசூர் செல்லும் மெயின் ரோட்டில் ரெயில் நிலையம், அரசு ஆம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, வனத்துறை அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில் யூ டர்ன் போல தார்சாலை வளைவாக உள்ளது. இதனால் இரண்டு பக்கமாக இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி யூ டர்ன் போல உள்ள வளைவு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-.சபரிசீனிவாசன், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்