தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காட்டம்பட்டி முதல் மாரியம்மன் கோவில் வரை சுமார் 2 கி.மீ. தூரம் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
-சந்தோஷ், காட்டம்பட்டி, தர்மபுரி.