சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவும், ராஜா தெருவும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் சாலை ஓரத்தில் கழிவுநீர் வடிகால்வாய் சேதமடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பள்ளத்தை மூடியுள்ளனர். துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும், இதற்கு காரணமாக இருந்த 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.