மோசமான சாலை

Update: 2022-06-15 12:20 GMT
அம்பத்தூர் அத்திப் பேட்டில் உள்ள மேட்டு தெரு, செல்லியம்மன் கோவில் மெயின் ரோடு மற்றும் பி.கே முகம்மது சாலையிலிருந்து 1 1/2 கிலோமீட்டர் தூரம் வரை மெட்ரோ வாட்டர் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை சரியாக மூடாமல் அதன் மேலேயே சாலை போட்டுவிட்டதால், அந்த சாலை பள்ளமும் மேடுமாக மோசமாக காட்சி தருகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்