குடிநீர் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-11 11:36 GMT

கூடலூர் 16-வது வார்டு தண்ணீர் தொட்டி பின்புறம் நகர விரிவாக்க பகுதிக்காக கொண்டு செல்லப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வந்தது. இதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் குழி தோண்டி சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. ஆனால் சீரமைப்பு பணி முடிவடைந்தும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்