கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சி முச்சானிமேட்டில் இருந்து சென்னை சாலையில் உள்ள அரசு மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே புதிய தார் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-பழனிவேல், மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.