சென்னை பூக்கடை ஒட்டிய பந்தர் தெருவில் புத்தக கடைகள், பழக்கடைகள் பொன்ற கடைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே நெரிசல் மிகுந்த இந்த இடத்தின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் உள்ளேயும் வெளியேயும் வாகனங்களை எடுத்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு வழங்க வழி செய்ய வேண்டும்.