சென்னை அயனாவரம் குட்டியப்பன் தெருவில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீண்ட நாட்களாக திறந்த நிலையிலே இருக்கும் பள்ளத்தால் அந்த தெருவில் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. மேலும் பள்ளத்தின் மேல் பகுதியில் மின்சார கேபிள்கள் கிடப்பதால், மழை பெய்தால் மின் கசிவு ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.