ஜல்லி கற்கள் பரப்பிய சாலை

Update: 2022-08-09 15:29 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் 4 ரோட்டில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?.

-பிரபாகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்