ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்

Update: 2022-06-11 15:21 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அம்பிகாபுரம் 2 வது குறுக்குத் தெருவில் வீடு கட்டும் பணி நடக்கிறது. இதனால் சிமெண்ட், மணல் மற்றும் செங்கல் போன்ற பொருள்கள் சாலையிலேயே கொட்டப்படுகிறது. இந்த சாலையை வாகனத்தில் கடந்து செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டே கடந்து செல்கிறார்கள். மேலும் சில நேரங்களில் ஒரு கிலோமீட்டர் வரை சுற்றி செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

சாலை வசதி