சென்னை தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி பாலம் அருகே ரெயில் தண்டவாளங்கள் செல்கின்றன. இந்த தண்டவாளங்களில் சரக்கு ரெயில்கள் அடிக்கடி செல்வதால் ரெயில்வே கேட்டும் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அலுவலகங்கள் செல்லும் மக்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்படுகிறது. இந்த பகுதியில் பாலம் அமைக்கப்படவேண்டும் என்பது அநேக மக்களின் நீண்ட கால கோரிக்கை.