சென்னை கோடம்பாக்கம் பாரதி ஈஸ்வரர் காலனி 3-வது தெருவில் சாலையையொட்டி 2 மரங்கள் மிகவும் சாய்ந்து நிலையில் இருக்கின்றன. கீழே விழுந்துவிடும் வகையில் உள்ள மரங்கள் எந்த நேரத்திலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழும் ஆபத்தான நிலை உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பு அதிகாரிகள் கவனித்து மரங்களை அகற்ற வேண்டுகிறோம்.