சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னும் சாலை சரி செய்யப்படவில்லை. இதனால் தண்டையார்பேட்டை பிரபல மருத்துவமனையிலிருந்து போலீஸ் நிலையம் வரை ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் இந்த இடத்தை கடந்து செல்வதற்குள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலை சரி செய்யப்பட்டு மீண்டும் சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.