கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆலந்தூர் மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. இதனால் வியாபாரிகள் எம்.கே.என் சாலையிலுள்ள நடைபாதையில் கடை விரித்து வியாபரம் செய்து வந்தனர். ஆனால் சமீபத்தில் மார்க்கெட் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து நடைபாதையிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் எம்.கே.என் சாலை மற்றும் புதுபோட்டை தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வழி வகுக்கிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?