சாலை புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-08-07 16:49 GMT

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. அதை அடுத்து சிலுவம்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை புதுப்பித்து தர ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், நல்லிபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்