புதுக்கடை அருகே பைங்குளம் பஞ்சாயத்து உள்பட்ட நெசவாளர் தெரு சாலமன் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். இந்த சாைல பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இங்கர்சால், அம்சி.