பெயர் பலகை வைக்கலாமே!

Update: 2022-08-06 14:33 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்-ஆத்தூர் மெயின் ரோட்டில் சீராப்பள்ளி அருகே வெங்கசிக்கல் மேடு உள்ளது. இங்கிருந்து வடுகம் முனியப்பம் பாளையம், வடுகம் போன்ற கிராமங்களுக்கு சாலை செல்கிறது. ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, ராசிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வடுகம் முனியப்பம் பாளையத்திற்கும், வடுகத்திற்கும் செல்ல வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக வெங்கசிக்கல் மேட்டில் பெயர் பலகை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், வடுகம், நாமக்கல்.

மேலும் செய்திகள்