கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மலைப்பாடி பகுதி சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.
-சக்தி, மலைப்பாடி, கிருஷ்ணகிரி.