கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் தார்சாலை அமைக்க ஒரு மாதத்திற்கு முன்பு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் தார்சாலை அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-குமரவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.