சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-06 12:33 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பெருமாம்பட்டி கிராமத்தில் உள்ள தார்சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல்  உள்ளது. இதனால் அந்த சாலை மோசமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.  இந்த சாலை வழியாக  பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-நா.தருண்குமார், பெருமாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்