தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சந்தை தோப்பு பகுதியில் அமைந்துள்ள போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் இந்த பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், பென்னாகரம், தர்மபுரி.