தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- தர்மபுரி செல்லும் பிரதான சாலையில் வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக வளாக நிறுவனங்கள் என எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்தநிலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் தற்போது வரை சரி செய்யப்படாததால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனேவ முக்கியமான இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும்..
-பிரியன், பாலக்கோடு, தர்மபுரி.