தர்மபுரி ரெயில் நிலையம் சாலையில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு தார்சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியின் அருகில் உள்ள இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
-பால்ராஜ், தர்மபுரி.