கூடலூர் பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் மலைமாடுகளை கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச்செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இதனால் மாடுகளை மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.