ஈரோடு 18-வது வார்டில் ( புதிய வார்டு 9) ஈகிள் கார்டன், விசுவநாத நகர், கேஜி கார்டன் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக சாலை பராமரிப்பின்றி குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பெரிய குழியும் மூடப்படவில்லை. இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும்-குழியுமான ரோட்டை சீரமைத்து, விபத்தை ஏற்படுத்தும் குழியையும் மூடவேண்டும்.