குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-04 16:23 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஹள்ளி வரை பெல்ரம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது. இந்த சாலை வழியாக பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, அமானிமல்லாபுரம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கிராம மக்கள் சென்று வருகின்றனர். குண்டும், குழியுமான இந்த சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாற்று வழி இல்லாததால் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்திவேல், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்