பிரச்சினை முடிவுக்கு வந்தது

Update: 2022-05-31 14:29 GMT
சேத்துபட்டு மெட்ரோ ரெயில் வேலை நடைபெறுவதால் பல வாகனங்கள் அணுகு சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் குருசாமி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக போக்குவரத்து அதிகாரிகளால் அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், நடவடிக்கை எடுத்த போக்குவரத்து அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகள்