ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு விநாயகா நகரில் சாலை அமைக்கப்படாததால் மண் பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே விநாயகா நகரில் சாக்கடை கால்வாய் வசதியுடன் சாலை அமைக்க வேண்டும்.