நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து இலந்தையடி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் கசிந்து சாலையில் செல்கிறது. இதனால் சாலை சேதமடைந்து உள்ளது. எனவே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிவதை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு சாலையையும் சீரமைக்க வேண்டும். ஏனெனில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.