கடலூர் பெரியகங்கணாங்குப்பம் நெடுஞ்சாலை வழியாக 24 நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும் இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால், சாலையை கடக்கவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சாலையின் மறுபுறத்தில் உள்ள வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.