ஆபத்தான சாலை

Update: 2022-08-02 15:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி அருகே சின்னஏரி குட்டை பகுதியில் எர்கெட் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. தடுப்புச்சுவர் அருகில் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் சாலையை கடந்து செல்பவர்களுக்கு விபத்து ஏற்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-கருணாகரன், காரகுப்பம், தர்மபுரி.

மேலும் செய்திகள்