தர்மபுரி- பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகில் தார்சாலை நடுவே 3 மாதத்திற்கு முன்பு 1 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. தற்போது மழை பெய்து சாலை முழுவதும் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் குழியில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
-கஜேந்திரன், பாலக்கோடு, தர்மபுரி.