தர்மபுரி முதல் ஆட்டுகாரம்பட்டி வரை செல்ல இரு வழிச்சாலை உள்ளது. தினந்தோறும் அதிக அளவில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தர்மபுரி நகருக்கு இந்த சாலையில் சென்று வருகிறார்கள். சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இந்த பகுதியில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தர்மபுரி முதல் பென்னாகரம் வரை இருவழி சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தசாமி, பென்னாகரம், தர்மபுரி.