நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்கரையிருப்பில் திருமருகல் - மருங்கூர் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் இந்த தற்காலிக பாலம் ஒரு பகுதியில் கரைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க வழியின்றி இந்த பாலத்தின் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கபட்ட தற்காலிக பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.