நாகப்பட்டினம் மாவட்டம் அந்தனப்பேட்டை ஊராட்சியில் வெட்டுக்குள மேலத்தெரு உள்ளது. இந்த தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.