சாலைகளில் குளம் போல் தேங்கும் மழைநீர்

Update: 2022-07-31 12:33 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் கடைகுட்டி மாரியம்மன் கோவில் செட்டி தெரு, மகாமாரியம்மன் கோவில், குச்சிபாளையம் தெரு, குடவாசல் சாலை, பாபநாசம் சாலை, கீழ அக்ரஹாரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கடைகள், மருந்தகம் ஆகியவை உள்ளன. இந்த வழியாக ஏராளமானோர் தங்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்