மதுரை மாவட்டம் சிம்மக்கல்-பெரியார் பஸ் நிலையம் செல்லும் சாலையில் மழை பெய்ததால் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி வெள்ளம்போல் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகி அப்படியே சாலையில் நிற்கிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் கால்வாய்களை சரியான முறையில் சுத்தம் செய்து மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.