சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஜெகன்னாதன் சாலையின் மூலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் தடுக்கி விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் எச்சரிக்கையுடனே பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைவில் இந்த பள்ளத்தை சரி செய்யவேண்டும்.