அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம்-பாலகுட்டை இடையே சரியான போக்குவரத்து வசதியில்லை. சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு மண் சாலையாக உள்ளது. இது மழை பெய்யும் போது சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் பாதையில் செடி, கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே தார்சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.