வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து வள்ளலார் செல்லும் சர்வீஸ் சாலையிலும், அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையிலும் மணல் அதிகமாக உள்ளது. வேகமாக காற்று அடிக்கும்போது மணல் பறந்து சாலையில் செல்பவர்களின் கண்களில் விழுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் கிடக்கும் மணலை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிவண்ணன், வேலூர்