நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த சாலை சேதமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்கும் பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த சாலையின் வழியாக வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.