மதுரை மாவட்டம் கீரைதுரை புதுமகாளிபட்டி ரோடு பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத வகையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.