சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஆறுமுக ஐயர் நகர் தெருக்களில் சாலை சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் சாக்கடை கால்வாயை தூர்வாரி சாலையை புதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.உதய், கெங்கவல்லி, சேலம்.