ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-05-20 17:17 GMT
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 149-வது தெருவில் சில நாட்களுக்கு முன்பு மின் வாரியம், சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை மூடாமலே விட்டுவிட்டனர். இதனால் இந்த பகுதியில் இருக்கும் ரேஷன் கடை, அங்கன்வாடி போன்ற இடத்திற்கு செல்ல சிரமமாக இருப்பதோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சி தருகிறது. எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்