சென்னை கொரட்டூர் மாதனாங்குப்பம் சாலையில் 3 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லை. அருகில் அரசினர் ஆரம்பப் பள்ளி மற்றும் சில கோவில்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்பதால் பாதசாரிகள் சாலையை கடக்கவே சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் வேகமாகவும் செல்வதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைத்து தர வேண்டுகிறோம்.