திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் 24 மணிநேரமும் போக்குவரத்து இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெருக்கடி என்பது தீர்க்கப்படதாத ஒன்றாகி விட்டது. இப்படி வாகன நெருக்கடி இருக்கும்போது கூட சில இளைஞர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவது தொடர்கதையாகி வருகிறது. எனவே அவர்களை போலீசார் கண்டறிந்து அவர்கள் ஓட்டிவரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.