சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-07-29 10:13 GMT

திருப்பூர்-தாராபுரம் சாலை நான்கு வழிச்சாலையாகும். ஆனால் இந்த சாலை திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் மிகவும் குறுகலாக உள்ளது. ஒரு வாகனம் கூட செல்ல முடிவது இல்லை. அதிலும் சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு, கார்கள், இருசக்க வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் உயிர்காக்கும் ஆம்புலன்சு கூட அவசர உதவிக்குசெல்ல முடியாமல் திணறுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் தீயணைப்பு வண்டி கூட செல்ல சிரமம் ஏற்படும். எனவே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


------------

மேலும் செய்திகள்