காரணம்பேட்டை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது. எனவே மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு பதாகை இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி பிரசுரமானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு அறிவிப்பு பதாகை வைத்தனர்.